அதிசயம் ஆனால் உண்மை !!

ச்ன் டீவீ நேயர்கள் "சிதம்பர ரகசியம்" சீரியல் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இன்த தொடர் "நாடி" ஜோசியத்தை மையமாக கொண்டது.
1996'ல் நான் அமெரிக்காவில் படிப்பை முடித்துகொண்டு இருந்தேன். அப்போது காலிங் கார்டு (calling card) உபயோகித்து இந்தியாவில் இருந்த என் பெற்றோறை கூப்பிட்டேன். அப்போதய வழக்கம் போல ச்ண்டை !!
என் பெற்றோர் என் கை ரேகைக்ளை தபாலில் அனுப்பு என்றார்கள்.. எனக்கு ஜாதகம், ஜோசியம் மீது வெருப்பு !! எனக்கென்று ஒரு பெண் இந்த உலகில் பிரந்து இருந்தால் அவளை இந்த ஜோசியர்களால் ஏன் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை ?
இந்த சண்டை ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் நீடித்திருக்கும். அப்போது என் "அட்வைசர்" (thesis advisor -குரு) ரூமுக்குள் வந்தார். அமெரிக்கரானாலும் இந்திய கலாசாரத்தை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்தவர். "இந்த சின்ன சின்ன விஷயங்களுக்காக ச்ண்டை போட்டு என்ன சுகத்தை கண்டாய் ? கை ரேகை தானே கேட்கிறார்கள் ? குடுத்துவிடு ! அவர்களுக்கு அதை வைத்து ஏதேனும் தெரிந்தால் அதை அவர்களோடு வைத்துக்கொள்ள சொல்.. " என்றார்.. அவரே போய் ஒரு காகிதத்தில் என் லாபில் இருந்த இங்க்கை வைத்து என் கை ரேகைக்ளை பதிவு செய்தார்.. ஒரு கவரில் அந்த காகிதத்தை போட்டு என் வீட்டு விலாசத்தை எழுத வைத்து "நான் வீட்டுக்கு போகும் போது இதை தபால் பெட்டியில் போட்டு விடுகிறேன்" என்றார். அன்று என் அட்வைசரிட்மிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் "சின்ன விஷயங்களுக்காக யாரோடும் சண்டை போட்க்கூடாது !"..
அந்த தபால் போய் சேர்ந்ததா இல்லையா என்றுகூட நான் என் பெற்றோறை கேட்கவில்லை ! சுமார் பத்து மாதங்களுக்கு பிரகு நான் இந்தியா சென்றேன். அப்போது என் கை ரேகை கிடைத்ததா என்று கேட்டேன்..உடனே அப்பா ஒரு ஆடியோ காஸட்டை எடுத்து வந்தார்.
அந்த காஸெட்டில் இருந்த விஷயங்களை என்னால் மரக்கவே முடியாது !! என் பெயர், என் தந்தை, தாய், பெயர், என் உடன் பிறப்புகளின் எண்ணிக்கை, என் படிப்பு, என் முழு ஜாதகம் (எந்த கட்டத்தில் எந்த கிரகம் உள்பட !!), திருமணத்தை பற்றிய என் எண்ணங்கள், என்று என்னை திகைக்க வைக்கும் அளவுக்கு குறிப்புகள் !! இத்தனை விஷயங்களும் என் கை ரேகையிலிருந்து ??
இதில் பிரமிப்பிற்க்குறிய விஷயம் என்ன தெரியுமா ? "இவனுடைய பலன்கள் இப்போது உங்களுக்கு தெரிந்தாலும், இவனுடைய இருபத்திஐந்தாம் வயதுக்கு பின் தான் இவன் தெரிந்து கொள்வான்" என்று சொல்லி இருந்தார்கள் !
இது வரை அந்த காஸெட்டில் இருந்த விவரங்கள் பொய்யாகவில்லை !!
இது எப்படி சாத்தியமாகும் ? இதைப்பற்றி நான் அவ்வளவாக சிந்திக்க மாட்டேன். என் வாழ்கை ஏர்கனவே நிர்ணயிக்கப்பட்டது என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை !! ஆனால் விஞ்ஞானரீதியில் இது என்னை பிரமிக்க வைக்கிரது !
0 comments