நடுக்கடலில் மிரட்டிய பேய் கப்பல்!
நியூயார்க் துறைமுகத்தில் இருந்து மேரி செலஸ்டி என்ற சொகுசு கப்பல் கானா நோக்கி நவம்பர் மாதம் புறப்பட்டது. ஐரோப்பிய கடற்கரை வழியாக பயணத்தை தொடர்ந்த கப்பல் டிசம்பர் 4&ம் தேதி அட்லான்டிக் கடலின் நடுப்பகுதியில் அசோரிஸ் தீவுகள் பகுதி வழியாக காற்றை கிழித்துக்கொண்டு அலைகளில் மிதந்தபடி அமைதியாக சென்று கொண்டிருந்தது.
அந்த வழியாக வந்த டே கிரேஷியா என்ற பிரிட்டிஷ் கப்பலில் சென்றவர்கள் நடுக்கடலில் மற்றொரு கப்பல் செல்வதை பார்த்து மகிழ்ந்தனர். மேரி செலஸ்டி கப்பலில் சென்றவர்களை தொடர்பு கொள்ள முயன்றனர். இதற்காக பல்வேறு சிக்னல்கள் கொடுத்தனர். ஆனால், எந்த பதிலும் இல்லை. கப்பலை நெருங்கி வந்து சத்தம் போட்டனர். அப்போதும், அந்த கப்பலில் எந்த சலனமும் இல்லை. இதனால், சிறு படகுகள் உதவியுடன் மேரி செலஸ்டி கப்பலில் ஏறி உள்ளே சென்றனர்.
கப்பலில் விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருந்தன. உணவு பரிமாறும் கூடத்தில் காலை உணவு தயாராக இருந்தது. துவைக்கப்பட்ட துணிகள் கொடிகளில் உலர்த்தப்பட்டிருந்தன. பாதுகாப்பான அறைகளிலும் ஏராளமான உணவுப்பொருட்கள். தயார் நிலையில் உயிர் காக்கும் படகுகள் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. துடைத்துவிட்டதுபோல கப்பல் பளிச்சென்று இருந்தது.
தளம்தளமாக சென்று தேடினர். ஆனால், ஒருவரைக்கூட காணமுடியவில்லை. எல்லாரும் எங்கே போனார்கள்? பிரிட்டிஷ் பயணி களுக்கு ஆச்சரியம். மேல் தளத்தில் ஆரம்பித்து கீழ் தளம் வரை பாத்ரூமைக்கூட விடாமல் தேடினர். ம்ஹூம். ஆள்அரவமே இல் லை.

‘இந்த கப்பல் விபத்தில் சிக்கியிருக்கலாமோ’ என்று ஒருவர் சொன்னார். விபத்தென்றால் சிறு சேதமாவது இருக்க வேண்டும். மேலும், ஒன்றிரண்டு பேராவது மிஞ்சியிருப்பார்கள். அதுவும் இல்லை. போராட்டம், சண்டை நடந்ததற்கான அறிகுறியும் இல்லை. கொள்ளை நடந்ததுபோலவும் தெரியவில்லை. எல்லா பொருட்களும் அப்படியே இருக்கின்றன. உணவுகள் தயாராக உள்ளன. தயாரித்தவர்கள் யார் எனத் தெரியவில்லை. கப்பலில் இருந்தவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்றால் உயிர்காக்கும் படகுகள் அனைத்தும் பத்திர மாக உள்ளன?
என்னதான் நடந்தது இந்த கப்பலில்? யாருமே இல்லாமல் கப்பல் மட்டும் பயணத்தை அமைதியாக தொடர்ந்தபடி இருந்தது. பிரிட் டிஷ் பயணிகளுக்கு பீதி அதிகரித்தது. பேய் கப்பலாக இருக்குமோ? சந்தேகத்துடன் இதயத் துடிப்பும் பலமடங்கு அதிகரித்தது. அலறி அடித்துக்கொண்டு கப்பலை விட்டு இறங்க முயன்றனர்.
திடீரென ஏதோ உருண்டு விழும் சத்தம் கீழ் தளத்தில் கேட்டது. பயணிகள் யாரும் நகரவில்லை. பதற்றத்துடன் சில நொடிகள் கடந்த பிறகு, சாம்பல் நிற பூனை தாவி ஓடி வந்தது. பிரிட்டிஷ் மக்களை பொறுத்தவரை, கப்பல் பயணத்தின்போது பூனையை காண் பது நல்ல சகுனம். அந்த சூழ்நிலையில் அங்கு பூனையை பார்த்ததும் அவர்களுக்கு சற்று நிம்மதி. அடுத்த சந்தேகம்.. யாருமில்லாத கப்பலில் பூனை எப்படி தனியாக இருக்கிறது? ‘இதையெல்லாம் சிந்திக்க நேரமில்லை. தாமதித்தால் நாமும் மாயமாகக்கூடும். ஓடு, தப்பி ஓடு’ என்றபடி அவசர அவசரமாக மேரி செலஸ்டி கப்பலை விட்டு வெளியேறினர்.
பேய் கப்பல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. சம்பவம் நடந்தது 1872&ல். 138 ஆண்டுகள் ஓடிவிட்டன. கப்பலில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற விபரம் இதுநாள் வரை தெரியவில்லை. கப்பல் மர்மங்கள் வரலாற்றில் இதுவும் இடம் பிடித்திருக்கிறது. - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=14#sthash.HAbmhmzh.dpuf

0 comments