ஜப்பான் பிரதமர் தங்கும் அரசு இல்லத்தில் பேய், பிசாசு

By 04:38

undefined
டோக்கியோ: ஜப்பான் பிரதமர் தங்கும் அரசு இல்லத்தில் பேய், பிசாசு நடமாடுவதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.ஜப்பானில் கடந்த 5 மாதத்துக்கு முன்பு தேர்தல் நடந்தது. இதில் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர் ஷின்சோ அபே. பிரதமராக தேர்வு செய்யப்படுபவர்கள், அரசு சிறப்பு இல்லத்தில் தங்குவது வழக்கம். பதவியில் உள்ள வரை குடும்பத்துடன் பிரதமர் இந்த இல்லத்தில் தங்கலாம். ஆனால் அபே பதவியேற்று 5 மாதங்கள் முடிந்தும், இதுவரை அரசு இல்லத்துக்கு குடிபெயரவில்லை. அரசு இல்லத்தில் பேய், பிசாசு உலாவுகிறது. அதனால்தான் அபே இதுவரை அங்கு செல்லவில்லை என்று ஜப்பானில் பரபரப்பாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1932ம் ஆண்டு ஜப்பான் பிரதமராக இருந்த சுயோஷி இனுகாய் என்பவர், அரசு இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டார். அது முதல் அரசு இல்லத்தில் பேய், பிசாசு உலாவுவதாக கருத்து நிலவுகிறது. எனினும் இந்த இல்லம் 2005ம் ஆண்டு வரை அரசு பயன்பாட்டில் இருந்தது. தற்போது அபே அந்த இல்லத்துக்கு செல்லாதது குறித்து பல்வேறு கண்டனங்கள் வெளியாகி உள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை அரசு வெளியிட்டது. அதில் பேய் உலாவுவது குறித்து எந்த ஆதாரமும் இல்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ராணுவத்துக்கு சொந்தமான இடத்தில் 1929ம் ஆண்டு பிரதமர் இல்லம் கட்டப்பட்டது. இந்த இல்லம் கடந்த 2000ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. அதில் பேய் உலாவுவதாக கூறுவதை நம்பவில்லை. மிகவும் பழமையான இல்லம் என்பதால் பிரதமர் அபே மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு கருதியே அந்த இல்லத்துக்கு இதுவரை குடிபெயரவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

0 comments