உலவும் ஆவிகள்

By 03:54


இறந்து போனவர்ளுடைய ஆவிகள் தங்கள் குடும்பத்தினரைக் கண்காணிக்கின்றன என்பதற்கு, மறுக்க முடியாத ஆதாரங்கள் கிடைக்கின்றன.

ஆவி உலகில் உலவுகிற சிலர், தங்களுக்குப் பிரயமானவர்களின் உடலில் புகுந்து கொண்டு, அவர்களையே மீடியமாக வைத்து, மறவர்களோடு பேசுகிறார்கள் என்பதும் உண்மை.
 திரு. பி.ஜி. கருத்திமன் அவர்கள், இதுபற்றி இரண்டொரு கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.

இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாக்க்கொண்டு பேசுவதும் உண்டு.

எனக்கே இதில் அனுபவம் உண்டு.

1941 - ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார்.

அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு.

அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு.

ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக்கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும்.

அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்!

சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும்.

மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும்.

மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும்.

இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன்.

ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன.

இறந்து போனவர்களுக்குப் பிரியமானபதார்த்தங்களை செய்து நாம் படையல் நடத்துகிறோம் அல்லவா? அந்தப் பதார்த்தங்களை ஆவிகள் உண்ணுகின்றன என்பது ஐதீகம்!

தர்க்கத்திற்கு இது நிற்க முடியாது. என்று வாதிடுவோரும் உண்டு.

ஆனால் இறந்து போனவர்களுடைய ஆவி பற்றிய பல சம்பங்களைத் தம் வாழ்யாளிலேயே கண்டிருக்கிறார் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

அவர் கூறியுள்ள சில அனுபவங்களை அப்படியே இங்கு எடுத்துக்கொடுப்பது வாசகர்களைச் சிந்திக்க வைக்கும்.

அவர் சொல்லியுள்ள பல விஷயங்களில் சிலவற்றை மட்டுமே நான் இங்கே தருகிறேன்.

இறந்தவர்கள் மீடியமாக இருப்பவர்களுக்குத் தெரியாத பாஷையில் அறிவித்தல்:

தூத்துக்குடியில் வருமான வரி ஆபீசராக இருந்த ஓர் இஸ்லாமியர்,இறந்தவர்களோடு பேசுவதன் உண்மையை அறிய வேண்டும் என்று, எமது தம்பியார் வீட்டிற்கு வந்து இருந்தார். அவர் தாமும் பேசிப் பாக்க வேண்டும்ந ஆனால் தமிழைத் தாய் பாஷையாக்க் கொண்ட மூடியம் மூலம், அந்த மீடியத்திற்குக் கொஞ்சமும் பழக்கமில்லாத பாஷையாகவும் தமது தாய் பாஷயாகவும் இருக்கும் உருது பாஷையில் கேள்விக்கேட்டு பதிலும் உருது பாஷையில் வந்தால்தான், அது மீடியத்தில் ஏற்பட்ட பதில் அல, இறந்தவருடைய வாக்கே ன்று உறுதியாக் கூற முடியுமென்று சொன்னார். “தம்பியார் யாரும் இவ்வாறு இதுவரை யோசித்துப் பார்க்கவில்லை; ஆபிஸர் சொல்வது சரியான சோதனையோ சோதித்துப் பார்ப்போமே” என்றுபார்த்தார். ‘உருது’ ஒரு வார்த்தையும் தெரிஆத பிராமணச் சிறுவன் மீடியாமாக இருக்க, அவன் மூலம் உருது பாஷையில்பதில் வரவே ஆபிஞரும் மற்றவர்களும் திகைத்துப் போனார்கள்.மேற்கொண்டு பேசவேண்டும் என்று ஆபிசரும் விரும்பவே ஆவி உலகத்திலிருந்து அவருடைய கொழுந்தியாள், ‘இப்பொழுது மேற்கொண்டு பேசவேண்டாம்; இங்கு பேசுகின்ற முறையிலேயே வீட்டில் வைத்துப் பேசுங்கள்; வீட்டில் இருக்கும் மகள் மீடியமாக இருக்கிறாள்’ என்உ அறிவித்து விட்டாள். அதன்படி அவர்க வீட்டில் வைத்துப் பேசவும், அதன் உதவியைப் பிறருக்கு எடுத்துச் சொல்லவும் ஆரம்பித்துவிட்டார் ஆனதால் நல்ல சக்தி வாய்ந்த மீடியமாக இருந்தால், மீடியத்திற்கு தெரியாத பாஷைகளிலும் பேச்சு நிகழ்த்தலாமென்பதும், அதில் மீடியத்தினுடைய அறிவின் விளக்கமோ மீடியம் கள்ளத்தனமாக வேண்டுமென்ற தன்னுடைய கருத்தை போலித்தனமோ, ஓர் அணுவளவும் கல்ல முடியாதென்பதும் பெறப்படுகின்றதல்லவா?

மறதியாகப் பணம் வைக்கப்பட்ட இடத்தை இறந்தவர் அறிவித்தல்:

ஆவி உலகத்திலிருந்து அறிவித்தபடியே அந்த வருமானவரி அதிகாரி தன்னுடைய வீட்டில் உருது பாஷையில் தன்னுடைய சொந்த மகளை மீடியமாக வைத்துப் பேசியதில், அவருடைய மனைவியின் தங்கை ஆவியுலகத்திலிருந்து பல அரிய விஷயங்களை அறிவித்ததாகத் தெரிவித்தார். அவற்றுள் ஒன்று மட்டும் இங்கு குறிப்பிடுகின்றோம். ஒரு நாள் அவருடைய சட்டைப்பையில் போட்டு வைத்திருந்த ஒரு ரூபாயைக் காணாத காரணத்தால், அவர் தம்முடைய வேலைக்காரன் திருடியிருக்கலாம் என்று கருதி அவனைக் கடுமையாக்க்கோபித்து அடித்துவிட்டார். மறுமுறை ஆவி உலகத்திலிருந்ததன்னுடைய கொழுந்தியாளோடுபேசியது காணாமற் போன ரூபாயைக் குறித்து அவர் ஒன்றும் பேசியதாகவும், அந்த ரூபாய் மேல் பையில் இருப்பதாகவும், அவரே ஞாபக்க்குறைவாக அதில் போட்டிருக்க, கீழ்ப்பையில் போட்டதாக எண்ணிக்கொண்டதாகவும், அந்த வேலைக்காரனைப் பேசியதும் அடித்ததும் பாவமான காரியமென்றும், அந்தப் பாவத்தைப்போக்குவதற்கு அவனிடம் உணைமையைச் சொல்லி, அவனுக்கு ஒரு ரூபாய் வெகுமதி கொடுக்க வேண்டும் என்று அறிவித்ததாகவும், அவர் அந்தப்படியே நடந்து கொண்டதாகவும், அதிலிருந்து ஆவி உலகத்தில் புண்ணியப் பகுதியிலுள்ள சுற்றத்தார் தாங்கள் இருந்த வீட்டில் ஏதாவது விபரீதமான காரியங்கள் நடந்தால், அதை எவ்வளவு கருத்தோடு கவனித்து வருகிறார்கள் என்பதையும் அவர் உணர்ந்த கொள்ள முடிந்ததாகவும் அறிவித்தார்.

இறந்த இஸ்லாமியர் தானாகவே வலிய வந்து தன் மகனது வியாகூலத்தைநீக்கல்:

ஈரோடு மார்க்கத்தில் கரூருக்குச் சமீபமாயுள புகழூரிலே ஒரு நாள் இரவு 1 மணிக்கு இறந்துபோன சுற்றத்தாருடன் பேசிக்கொண்டிருக்கையில் ஆவி உலகத்திலிருந்த ஓர் இஸ்லாமியர் வந்து தாம் அவ்வூரிலுள்ள (போஸ்ட் மாஸ்டர்0 தபால் அதிகாரியினுடைய தகப்பனார் என்றும், தம்முடைய மகன்தூக்கம் வராமல் விழித்துக் கொண்டு படுக்கையில் உட்கார்ந்து கொண்டு இருப்பதாகவும், அவன் அவனுடையமனைவியின் உடல் நிலை விஈயமாகவும் அவளூடைய பிள்ளைப் பேறு விஷயமாகவும் நினைத்துக் கொண்டே இருப்பதாகவும், அவனைத்தயவு செய்து கூட்டிக் கொண்டு வந்து தம்மோடு பேச வைக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாராம்.இரவில் 1 மணிக்கு அவரை அவ்விதம் கூப்பிடுவது சரியல்லவே என்று கேட்டபொழுது, “அவன் தூங்கிக்கொண்டிருப்பானானால் எழுப்பக்கூடாதுதான். ஆனால் விழித்துக்கொண்டிருக்கும்பொழுது தெருவாயில் கதவை லேசாகத் தட்டினாலே அவன் வந்து திறந்து விடுவான்; அதைப்பற்றி யாதும் யோசிக்க வேண்டாம். அந்த உதவியைச் செய்து தரவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். அதன்படி ஒரு வேலைக்காரனை அனுப்பி, ‘அவருடைய வீட்டுக் கதவைத் தட்டிப் பார்; விழித்திருந்து உடனே கதவண்டை யாரென்று கேட்டால், விவரம் சொல்லிக் கூட்டி வா; அல்லவிடில் வந்துவிடு’ என்று அறிவித்திருந்தோம். அவனும் (போஸ்ட் மாஸ்டர்) தபால் அதிகாரி வீட்டிற்கு சன்று லேசாக்க் கதவைத் தட்ட, அவர் எழுந்து வந்து யாரென்று கேட்டு வ்வரம் அறிந்து, தகப்பனாரிடம் பேச வந்து விட்டார். நாங்கள் இறந்தவர்களோடு பேசும் வழக்கமுள்ளவர்கள் என்பது மாத்திரம் அவருக்கு முன்னமேயே தெரியும். ஆவி உலகத்திலுள்ள தந்தையார் தமது மகனிடம், ‘கவலைப்பட வேண்டாம், மனைவிக்குச் சுகமான பிரசவம் நடைபெறும் ; பிறக்கப்போவது ஆண்குழந்தை’என்று சொல்லி, குடும்ப சம்பந்தமாக எலா நலங்களும் உண்டாவதற்கு மேலுலகத்தில் தாமும் ஆண்டவனிடம் பிரார்த்தித்து வருவதாகவும், வேறு சில இடையூறுகளை வரவொட்டாமல் தாம் தடுத்து விட்டதாகவும் சொல்லி, மகனை உற்சாகப்படுத்திஅனுப்பிவிட்டார்.

பின்னர், அதன்படியே மனைவிக்குச் சுக பிரசவன் நடந்து ஆண் மகவு பெற்றெடுத்தாள் என்பதை அறிவோம்.

இதிலிருந்து ஆவி உலகத்திலுள்ளவர்கள், நாம் நினைத்த மாத்திரத்தில் அந்த இடத்திற்கு வந்து நம்முடைய நிலைகளை நன்றாக அறிய முடிகிறதென்பதை உணருகிறோம். இதனை உபமானமாக்க் கொண்டுவிட்டால் சர்வ வல்லமையுள்ள ஆண்டவன், நாம் நினைப்பதையும் பேசுவதையும் சொல்வதையும் அறிந்து கொண்டும் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருக்க முடியும் என்பதை யாவரும் உய்த்து உணர்ந்து கொள்ள முடியும் அல்லவா?

இறந்தவர் தம் தம்பியிடம் தனது மகனுடைய அந்தரங்கச் செயல்களை அறிவித்து மணம்முடிக்கச் செய்தல்:

ஒருநாள் மதுரைக்கு வந்திருந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார் ஒருவர், அம்மைய நாயக்கனூருக்குத்தம்முடைய சொந்த மோட்டார் காரில் வந்து, காலம் சென்ற தம்தந்தையாருடன் பேசிப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார். அதன்படியே அவர் தம் தந்தையாருடன் பேசிக் கொண்டிருக்கும்பொழுது தந்தையார் தம்முடன் ஆவி உலகத்தில் இருந்த மூத்த மகன் (மதுரையிலிருந்து வந்திருந்த செட்டியாருடைய காலஞ்சென்ற தமையன்) தம்பியுடன் வந்திருப்பதாக அறிவித்தார்.அந்த அண்ணாவைப்பேச்ச் சொன்னபொழுது அவர், தம்முடைய மகன் காட்டுப் புத்தூரில் படித்துக் கொண்டிருப்பது போதுமென்றும், அவனைப் பற்றி அவ்வூரில் சில புகார்கள் வருகின்றனவென்றும், அவனும் இன்னொரு வயது வந்த பெண்ணும் காதல் கடிதங்கள் வரைந்து கொண்டிருக்கிறார்களென்றும், காரியம் முற்றிவிடுவதன் முன், அவனை ஊருக்குக் கூட்டிக்கொண்டு போய், வேற் பெண் பார்த்துக் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டுமென்றும், அம்மைய நாயக்கனூருக்குக் கொண்டு வந்திருக்கிற காரிலேயே, நேராக்க் காட்டுப்புத்தூருக்குப் போய் அங்குள்ள தம் மகனைக்கூட்டிக் கொண்டு வந்துவிட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

பேச வந்த செட்டியாருக்கு ஒன்றும் புலப்பட வில்லை. தாம் மதுரையில் அநேகரைக் காக்க வைத்து விட்டு, இரவு திரும்பி வந்துவிடுவதாக அம்மையநாயக்கனூருக்கு வந்ததாகவும், ஆனதால் நேரே மதுரைக்குத் திரும்பிப் போய் அங்குள்ள காரியங்களைப் பார்த்துவிட்டு, மறுநாள் காட்டுப்புத்தூர போவதாகவும் பதில் அறிவித்தார்.

ஆவி உலகத்திலிருந்து பேசிய தமையனும், மதுரைக் காரியத்தைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றும், காட்டுப்புத்தூர் காரியம் மிகவும் அவசரமானது என்றும், மதுரைக்குத் தந்தியைக் கொடுத்துவிட்டு, நேரே காட்டுப் புத்ததூருகுச் சென்று, தன்னுடைய மகன் விஷயத்தைக் கொஞ்சமும் தாமதியாமல் கவனித்து ஆவன செய்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டுமென்றும் திரும்பத் திரும்பச் சொன்னார். அதைப்பற்றித்தன் தந்தையாரிடம் செட்டியார் கேட்டபொழுது அவரும் அது மிகவும் அவசரமான காரியம்தான் என்று சொல்லவே மதுரைக்குத் திரும்பிவிட வேண்டுமென்று எண்ணியிருந்த செட்டியார், அந்த எண்ணத்தை மாற்றி, தந்தியில் தான் காட்டுப்புத்தூருக்குச் சென்று வருவதாக அறிவித்துவிட்டு, அம்மையநாயக்கனூரிலிருந்தே காரில் காட்டுப்புத்தூருக்குப் போய்விட்டார்.

அங்கு சென்று காரியங்களைப் பரிசீலனை செய்து பார்க்க, தம் தமையனார் சொன்னது முற்றிலும் உண்மை என்று புலனாயிற்று. ஆனதால், தன் தமையனார் தனக்கு அறிவித்தது போல், படித்துக்கொண்டிருந்த பையனுடைய படிப்புக்கு அன்றோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவனைத் தன்னுடைய ஊருக்கு அழைத்துச் சென்று, கால தாமதமில்லாமல் கல்யாணமும் செய்துவிட்டார். நாங்களும் அக் கல்யாணத்திற்குச் சென்று சிறப்பித்தோம்.

ஆகவே, ஆவி உலகத்திலிருக்கிற தந்தை தம்முடைய மகனுடைய நடத்தைகளைக் கண்காணித்து வருகிறார்ர் என்பதும், அதற்கு இன்னது செய்ய வேண்டுமென்று அறிவிக ஆர்வத்துடன் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருக்கிறார் என்பதும் இதிலிருந்து புலப்படுகிற தல்லாவா? அல்லாமலும் அம்மையும் அப்பனும் ஆகிய சர்வ வல்லமையுள்ள ஆண்டவனும், நாம் செய்கின் காரியங்களை எல்லாம் நமக்குத் தெரியாமல் கண்காணித்து வருகிறார் என்பதை ஊகித்து உணர்ந்து கொள்ளவும், நாம் நம்முடைய நடத்தைகளைத் திருத்தி அமைத்துக்கொள்ளவும், இச்சம்பவன் உள்ளத்தைத்தூண்டுகிற அளவுக்கு, எத்தனை புத்தகப் படிப்பும் மக்களைத்தூண்ட முடியாதன்றோ

You Might Also Like

1 comments

  1. Hard Rock Hotel & Casino New Orleans, LA - Mapyro
    Free services 부천 출장마사지 for rent at Hard Rock Hotel & Casino New Orleans: ✓ Property Location 부천 출장마사지 With 서울특별 출장마사지 a 구리 출장샵 stay at Hard Rock Hotel & Casino New Orleans 공주 출장샵 in New

    ReplyDelete